ஈரோடு நவ 26:

கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து ஆர்டிஓ பிரேமலதா நேற்று ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டத்தில் 11வது மாபெரும் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்குடன் மாவட்டம் முழுவதும் 437 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை முகாம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஈரோடு தாலூகாவில் சூரியம்பாளையம் கிராமம் மற்றும் லட்சுமிநகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை கோட்டாட்சியர் பிரேமலதா நேரில் ஆய்வு செய்தார். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/