ஈரோடு ஆக 19:
ஈரோடு மாவட்டத்தில் பரவல் தடுப்பு நடவடிக்கையுடன் தடுப்பூசி போடும் பணியை அதிகரித்துள்ளது. தற்போது ஓட்டுச்சாவடி வாரியாக தடுப்பூசி போடப்படுவதால், கூட்டம் குறைந்து காணப்படுகிறது. மாநகர பகுதியில் தினமும், 1,500 முதல், 2,000 பேருக்கும், கிராமப்புறங்களில், 9,000 முதல், 11,000 பேருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
முதல் டோஸ் குறிப்பிட்ட நாட்களும், இரண்டாம் டோஸ் குறிப்பிட்ட நாட்கள் என பகிர்ந்து போடப்படுகிறது. இதனால், தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் கணக்குப்படி, மாவட்ட அளவில், 8 லட்சத்து 82 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில், 2 லட்சம் பேருக்கு மேல் இரண்டாம் டோஸ் செலுத்தி உள்ளனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today