ஈரோடு டிச 7:

ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக நாளொன்றுக்கு மாவட்டத்தில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகின்றது. மாநில எல்லைப்பகுதியில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் தடுப்பூசி போடப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மாவட்டத்தில் நாளொன்றுக்கு 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 80 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 45 சதவீதம் பேர் இரண்டாம் தவணை செலுத்தி உள்ளனர். சாலை செப்பனிடும் பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு -– கரூர் சாலை உள்பட முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்படும். இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார். https://www.tnhealth.tn.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/