சத்தியமங்கலம் ஆக 24:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம் சுற்று பகுதியில் 725 பேருக்கு ரீடு தொண்டு நிறுவனம் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, சத்தியமங்கலம் அருகே ஆனைக்கொம்பு அரங்கில் நடந்தது. கொரோனா இரண்டாம் அலையால் தொழில், வேலை பாதித்து, தினக்கூலி பணிக்கு கூட செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
ரீடு நிறுவன இயக்குனர் கருப்புசாமி, கூடுதல் இயக்குனர் மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் 725 பேருக்கு தலா 1,200 ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை சமூக ஆர்வலர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், அப்துல்லா, தம்பிராஜன், குருசாமி, கிருஷ்ணவேணி, பொன்னுசாமி ஆகியோர் இணைந்து வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு, அவர்கள் பணி செய்யும் இடங்களில் ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today