ஈரோடு டிச 30:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலில் மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 40 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 52 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்புடன் ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 711 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 470 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.tnhealth.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today