ஈரோடு ஆக 17:

கொரோனா கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக டாஸ்மாக் கடைகளில் சராசரியாக 30 சதவீதம் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மெல்ல உயரத்தொடங்கியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய கடைகள் தவிர டாஸ்மாக் உள்பட மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்கு மூடிவிட வேண்டும் என்றும், மக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு முழுமையாக அனைத்து கடைகளையும் அடைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக மாலை 5 மணிக்கே மூட வேண்டிய நிலை உள்ளது. 3 மணி நேரத்திற்கு முன்பாகவே மூட வேண்டிய நிலை உள்ளதால் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் சராசரியாக 30 சதவீத விற்பனை பாதிக்கப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதே போல மக்கள் அதிகம் கூடும் இடங்களாக அறிவிக்கப்பட்டு பகுதிகளில் மொத்தம் 12 டாஸ்மாக் கடைகள் வாரத்திற்கு 2 நாட்கள் மூடப்படுவதாக ஊழியர்கள் கூறினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today