ஈரோடு ஆக 2:

ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சார்பில், ஒரு வார காலம் கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்த துவக்க நிகழ்ச்சியில் ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து டாக்டர் மார்ஷியா தலைமையில் டாக்டர்கள் செவிலியர்கள் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். ஈரோடு பஸ் நிலையத்துக்கு சென்ற மருத்துவ குழுவினர் அங்கு ஒலி பெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இதுபோல் வ.உ.சி., பூங்காவில் இயங்கி வரும் தற்காலிக காய்கறி சந்தைக்கு சென்ற மருத்துவ குழுவினர் அங்கும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். இந்த விழிப்புணர்வு வாரம் வரும் 7ம் தேதி வரை நடக்கிறது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today