ஈரோடு டிச 18:

புதியதாக விவசாய மின் இணைப்புகள் வழங்க வசதியாக  மின்வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

தமிழக முதல்வர் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த ஈரோடு மின்பகிர்மான வட்டம், நகரிய கோட்டத்திற்குட்பட்ட விவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின்வாரிய விதிமுறைக்குட்பட்டு பெயர் மாற்றம், சர்வே எண் உட்பிரிவு மாற்றம், சர்வே எண், கிணறு மாற்றம் செய்து கொடுக்க சிற்பபு முகாம் கவுந்தப்பாடி பிரிவு அலுவலகத்தில் வருகின்ற 23ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள விவசாயிகள் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பங்குதாரர்களின் ஆட்சேபனை இல்லா கடிதம், கிராம நிர்வாக அலுவலர் சான்று, வரைபடம் உள்ளிட்டவைகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tnebltd.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today