ஈரோடு நவ 20:

ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பி.பி.அக்ரஹாரம் பகுதி மற்றும் அசோகபுரம் பகுதி கழகங்கள் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்து பேசினார்.

முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் பழனிசாமி, பகுதி செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீசன், வக்கீல் துரைசக்திவேல் உட்பட பலர் பேசினர்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் முழு அளவில் அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற உழைக்க வேண்டும். அதற்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கான பிரச்னைகளை தீர்க்க முன்வர வேண்டும், என யோசனை தெரிவிக்கப்பட்டது. https://www.eci.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/