ஈரோடு ஆக 19:

நாடு முழுவதும் ஒரே சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த முயலும் ஒன்றிய அரசுக்கு கட்டுமான தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., கட்டிட தொழிலாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்டப் பேரவை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. மாநில செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார்.

மாநிலத் தலைவர் பெரியசாமி, மாநில பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், நாடு முழுவதும் ஒரே சமூக பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களையும், மாநிலங்களில் செயல்படும் நலவாரியங்களையும் சீர்குலைத்து, அவற்றில் உள்ள நிதிகளை கபளீகரம் செய்ய முயலும் ஒன்றிய அரசை கண்டிப்பது, தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் தொடர்ந்து செயல்பட மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

.நலவாரியத்தில் பதிவு செய்து, பதிவை புதுப்பிக்க தவறிய அனைவரையும் உடனடியாக புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து மரண இழப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். வாரிய உறுப்பினராக உள்ள பெண்களுக்கு மகப்பேறு கால உதவித்தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today