ஈரோடு ஆக 21:

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே காமராஜர் சிலை அருகே ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மண்டலத் தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், அம்புலி, திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் புனிதன்,  அரவிந்தராஜ், அம்மன் மாதேஷ் பாஸ்கர்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், கனகராஜ், வின்சென்ட் உட்பட பலர் பங்கேற்றனர். ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ராஜீவ்காந்தி படத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.எம்.பழனிச்சாமி உள்பட பலர் உடன் உள்ளனர். அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today