ஈரோடு டிச 6:

ஈரோட்டில் சட்டக் கல்லூரி அமைத்துக் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்குறைஞர் பிரிவு மாநில செயலாளர் சி.எம்.ராஜேந்திரன், தமிழக முதல்வரிடம் வலியுறுத்துமாறு ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ., இ.திருமகன் ஈவெராவிடம் சனிக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:

சென்னை உயர் நீதிமன்றத்தின் சர்க்கியூட் பெஞ்ச் கோவையில் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும். ரூ.7.5 லட்சமாக உள்ள வழக்குறைஞர் சேமநல நிதியை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறையை பின்பற்றி சுங்கச்சாவடிகளில் வழக்குறைஞர்களின் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். 

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வழக்குறைஞர் கூடத்தில் 24 அறைகள் மட்டுமே உள்ளன.  900 வழக்குறைஞர்கள் வழக்கு நடத்திவரும் நிலையில் புதிதாக வழக்குறைஞர் கூடம் கட்டித்தர வேண்டும். நீதிமன்றத்துற்கு வரும் வழக்குறைஞர்கள், பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த பாதுகாப்பு வசதியுடன் நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயே வாகன நிறுத்தம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நீதிமன்ற வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஏ.டி.எம். மையம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.  வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதால் நீதிமன்றம் முன்பு சம்பத் நகர் சாலையில் செல்லும் வாகனங்கள் ஒலிப்பான்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள மாநகராட்சி பூங்கா பணி நிறைவு பெற்று 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இந்த பூங்காவை உடனடியாக திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tndalu.ac.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/