ஈரோடு செப் 28: ஈரோடு மாநகராட்சி பகுதியில் மிகவும் மோசமான ரோடுகளை சீரமைப்பு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.கஸ்டாலினிடம் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா மனு வழங்கினார்.

அவர் வழங்கிய மனுவில் கூறியது,ஈரோடு மாநகரில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பாதாள சாக்கடை, மின்சார கேபிள் பதித்தல் பணிக்காக பிரதான சாலைகள் தோண்டி குழிகளாகி, இன்று வரை மூடப்படவில்லை. ஆங்காங்கு மண்கள் கொட்டி சமதளம் இன்றி மக்கள் துயரத்தை சந்திக்கின்றனர்.

ஈரோடு மாநகரில் பல பிரச்னைகள் இருந்தாலும், இப்பிரச்னையால் மக்கள் அதிகம் பாதிக்கின்றனர். ஈரோடு கருங்கல்பாளையம் முதல், நாமக்கல் மாவட்டம் செல்லும் பிரதான சாலையில் அழகரசன் நகர் குடியிருப்பு எதிரே, சேலம் மாவட்டம் சங்ககிரி, ராசாம்பாளையத்தை சேர்ந்த வீரப்பன்–சித்ரா தம்பதியினர் விபத்தில் சிக்கி, மோசமான சாலையால் சித்ரா இறந்தார்.

இச்சம்பவம் ஈரோடு மக்களை உலக்கியது.எனவே, அதிக தொழில்கள் உள்ள ஈரோட்டில் ஆர்.கே.வி., சாலை, காவேரி சாலை, நேதாஜி சாலை, கள்ளுக்கடைமேடு, மரப்பாலம், மண்டபம் வீதி, கிருஷ்ணா தியேட்டரை ஒட்டிய சாலை போன்றவைகளை அதிகமாக மக்கள் பயன்படுத்துவதால், அவற்றை சீரமைக்க வேண்டும்.மிக விரைவில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகையும், மழைக்காலமும் வருவதால் இவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், என கேட்டு கொண்டார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/