ஈரோடு நவ 9:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் கொமராயனூர் பஞ்சாயத்து தலைவர் விஜயாராமு தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், ஈரோடு டி.ஆர்.ஓ, முருகேசனிடம் புகார் மனு வழங்கினர்.

பின்னர் அவர்கள் கூறியது,அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள கொமராயனூர் பஞ்சாயத்தில், பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கட்டடம், கால்நடை மருத்துவமனை, விளையாட்டு மைதானம், வருவாயை பெருக்குவதற்காக மரம் வளர்ப்பு பணிகள் செய்ய முயல்கிறோம். வனத்துறையில் சென்னம்பட்டி வனச்சரகராக பணி செய்யும் செங்கோட்டையன் என்பவர் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தின் அருகே உள்ள இடத்தை, தேர்வு செய்து அங்கு பணிகள் செய்ய முயன்றோம்.

அங்குள்ள அரசு புறம்போக்கு இடத்தை அவர் உதவியுடன் ஆக்கிரமித்து, கம்பி வேலி அமைத்து, பஞ்சாயத்துக்கு தேவையான பணிகளை செய்ய விடாமல் மிரட்டுகிறார். இதனால் அப்பஞ்சாயத்தில் வளர்ச்சி பணிகள் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அதிகாரி வசம் உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, பஞ்சாயத்துக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வழி செய்து கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். https://www.forests.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/