ஈரோடு சூன் 30: ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் வரும் ஜூலை 15ம் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட மாணவ,- மாணவிகளின் திறனை வெளிப்படுத்த கீழ்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, -மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியம் போட்டியும், 10-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, -மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை (700 வார்த்தைகளுக்கு மிகாமல் ) இருக்க வேண்டும்.

கல்லூரி மாணவ, -மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த குறும்படம் (அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை) போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் உள்ள ‘ஈரோடு டிஸ்ட்ரிக்ட் போலீஸ்- இவென்ட்ஸ்’ பக்கத்தில் இன்று காலை 10 மணி முதல் வரும் 13ம் தேதி காலை 10 மணிக்குள் பதிவிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு தலைப்புகளில் இருந்தும் சிறந்த முதல் மூன்று மாணவ, -மாணவிகளுக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.இந்த தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே