ஈரோடு சூலை 16:

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவுப்படி, மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் ஆய்வு பணி துவங்கி உள்ளது. வீடு, கடை, வணிக வளாகங்களில் நீர் தேங்கிய இடங்களை சுத்தம் செய்தல், உரல், தொட்டி, டயர், குழிகள் போன்றவைகளில் நீர் தேங்கி இருந்தால், அவற்றை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்துகின்றனர். சுகாதார பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று பிரிட்ஜின் பின்புறம் வழியும் நீர் தேங்குவதையும், குடிநீர் பாத்திரங்கள், தண்ணீர் தொட்டி போன்றவைகளை பார்த்து, அவற்றில் புழு, பூச்சிகள் உருவாகாமல் தடுக்கும் யோசனைகளை தெரிவித்து வருகின்றனர். தவிர 300 வீடுகளுக்கு ஒரு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் வீடுகளில் சோதனை செய்து வருகிறார். பருவமழை துவங்க உள்ளதால், முன்னதாகவே ஆய்வு பணியை துவங்கி உள்ளனர். இப்பணி தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடக்கிறது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today