ஈரோடு சூலை 22:

தமிழகத்தில் பழம்பெரும் நடிகர் மறைந்த சிவாஜி கணேசனின் 20ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனை அருகே சிவாஜி கணேசனின் உருவ படத்திற்கு சிவாஜி ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவர் கண்ணப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணை தலைவர்கள் ராஜேஷ், பாஷா, மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், விஜயபாஸ்கர், சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிவராமன், காமராஜ், அன்பழகன், காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today