ஈரோடு அக்.19:

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து தங்கள் குறைகளை மக்களால் கொடுத்து வருகிறார்கள்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று கலெக்டர் அலுவலககூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அப்போது அவர் அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார். அதற்கு அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை. இதைத் தொடர்ந்து கலெக்டர் அதிகாரிகளை எச்சரித்து பேசியதாவது:-

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 3 மாத காலத்திற்குள் தீர்வு காண வேண்டும். அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நிராகரிக்கப்பட்டது என்று பதில் கூறினால் அதற்கு தகுந்த காரணத்தை தெரிவிக்கவேண்டும். இனி வரும் காலங்களில் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு வேண்டும். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள முடியாதபட்சத்தில் நன்கு விவரம் தெரிந்தவர்களை அனுப்பி வைக்கவேண்டும். பொதுமக்கள் 20 மனுக்கள் கொடுத்துள்ளார். அதில் 15 மனுக்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக்கை அளவில் கூறாமல் உண்மையாகவே அந்த மனு மீது எடுக்கப்பட்ட விவரங்களை தெரிவிக்கவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.மேலும் கலெக்டர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 70 சதவீதம் பேர் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும்,  கலெக்டர் தெரிவித்தார். https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/