ஈரோடு சூலை 13:

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன் திங்கள் கிழமைகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. தேர்தல், கொரோனாவுக்கான ஊரடங்கு போன்ற காரணத்தால் மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. தற்போது அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில், பொதுமக்கள் மனுக்களை போட்டு செல்கின்றனர். நேற்று 100க்கும் மேற்பட்ட மக்கள் மனுக்கள் வழங்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகத்துக்கு காரில் வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி காரை நிறுத்தி, அம்மக்களிடம் சென்றார். அவர்கள் வைத்திருந்த மனுக்களை வாங்கி, அதன் விபரங்களை கேட்டறிந்தார். ஒவ்வொரு மனுவையும், உரிய அலுவலருக்கு அனுப்பி தீர்வு பெற வேண்டும் என தனது உதவியாளரிடம் வழங்கினார். அவருக்கு பல்வேறு கூட்டங்கள் இருந்ததால், அதன் பின் வந்தவர்கள் அங்கு வைத்திருந்த பெட்டிகளில் மனுக்களை போட்டு சென்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே

https://www:erode.today