ஈரோடு செப் 30:

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையத்தில் உள்ள ரயில்வே காலனி மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் ஆகியவை உள்ள பகுதிகளை ஆய்வு செய்து, எண்ணிக்கைகளை சரி பார்த்தார். இதை தொடர்ந்து, அவ்வளாகத்தில் உள்ள போலீசாரின் பதிவேட்டில், அங்கு வந்து சென்ற அதிகாரிகள், போலீசார் விபரங்களை ஆய்வு செய்தார். https://www.elections.tn.gov.in

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/