சத்தியமங்கலம் நவ 18:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குத்தியாலத்தூர் மற்றும் கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.9.55 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில் 70 சதவீத மானியத்துடன் வழங்கப்பட்ட சூரிய சக்தி மின்மோட்டார் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.பின்னர் அவர் தெரிவித்ததாவது:
தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வேளாண்மைத்துறையின் சார்பில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் விளைச்சலுக்கு தேவையான தண்ணீரை மேல்நிலைத்தொட்டி, திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துணை கிணறு ஆகியவற்றின் மூலமாக பயன்படுத்தும் வகையில் மாநில அரசின் மானியமாக 40 சதவீதமும், ஒன்றிய அரசின் மானியமாக 30 சதவீதமும் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பாக 30 சதவீதத்துடன் பாரத பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தின் கடந்த ஆண்டு 33 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.87.75 லட்சம் மானியம் பெற்று பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூர் மலைப்பகுதியான குத்தியாலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியசாலட்டி பகுதியில் ரூ.4,54,967 மதிப்பீட்டில் ரூ.3,06,368- மானியத்துடன் சூரிய சக்தி மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. மாக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவினைசுவைத்து பார்த்தான். மேலும், மாக்கம்பாளையம் கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், சத்தியமங்கலம் வட்டாட்சியர் உட்பட பலர் பங்கேற்றனர். https://www.erode.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/