ஈரோடு செப் 17:

ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு அரசு சார்பில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், ஆர்.டி.ஓ., பிரேமலதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியாரின் பிறந்த நாளையொட்டி பெரியாரின் பொன்மொழிகள், உரைகள் ஒலிபரப்பப்பட்டதோடு பெரியாரின் இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/