ஈரோடு ஆக 16:

இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் கொரோனா காலத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சமாதானத்தை வெளிப்படுத்தும் விதமாக பல வண்ண பலுான்களை பறக்கவிட்டார். பின்னர் காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய் துறை, முன்னாள் படை வீரர், கொரானா தடுப்பு முன்கள பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்த 256 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

பின், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி 3 சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லத்துக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். இதேபோன்று கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் வயது மூப்பு காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 80 சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள்  இல்லங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். எஸ்.பி., சசிமோகன், டி.ஆர்.ஓ., டாக்டர் முருகேசன், ஆர்.டி.ஓ., பிரேமலதா, டவுன் டி.எஸ்.பி., ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இடையன்காட்டுவலசு, சின்னமுத்து வீதியில் உள்ள கருணையம்மாள், பெரியார் நகரில் உள்ள பாக்கியம், சிதம்பரம் ரெட்டியார் காலனியில் உள்ள திருமாதாள் ஆகியோர் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கினார். அதேபோல் மாவட்டம் முழுவதும் 80 தியாகிகளுக்கு கவுரவிக்கப்பட்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today