ஈரோடு நவ 20:

அந்தியூர் ஏரிக்கு உட்பட்ட நீர் வழிப்பாதைகள் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை எம்.எல்.ஏ, ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். அந்தியூர் ஏரிக்கு உட்பட்ட நீர் வழித்தடங்கள் வரும் குடியிருப்பு பகுதியான அண்ணா மடுகு, அம்மன் நகர், கண்ணப்பன் கிணற்று வீதி, கொல்லபாளையம் சாலை போன்ற இடங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

நீர் வழித்தடங்களில் உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் மக்கள் குளிக்கவும், துணிகள் துவைக்கவும் கூடாது என அறிவுறுத்தும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்க உத்தரவிட்டார். முன்னதாக வரட்டுப்பள்ளம் ஏரியில் இருந்து உபரி நீர் வழித்திடமான புதுப்பாளையம் பகுதியை ஆய்வு செய்தார்.

பின், அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, வரட்டுப்பள்ளம் ஏரியை ஆய்வு செய்து, நீர் வரத்து விபரத்தை சேகரித்தார். அவ்விடங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.கோபி ஆர்.டி.ஓ, பழனிதேவி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தாமோதரன், உதவி பொறியாளர் ரவி, அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/