பெருந்துறை டிச 20:

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, விரைவில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமான பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டம், பெத்தாம்பாளையம், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நல்லம்பட்டி, காஞ்சிக்கோயில், பள்ளபாளையம் மற்றும் சென்னிமலை ஆகிய 7 பேரூராட்சி பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் பெருந்துறை, சென்னிமலை சாலை, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குப்பெட்டிகள் இருப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்குச்சாவடி முகவர்கள் அறை ஆகியவை குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பெருந்துறை ஏ.எஸ்.பி., கௌதம்கோயல், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கே.வெங்கடேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜ் (தேர்தல்), ஜெகதீசன் (வளர்ச்சி), பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். https://www.eci.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today