ஈரோடு ஆக 7:

ஈரோடு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வருகை புரிந்தார். தாசில்தார் அலுவலகத்தில் பெறப்பட்டு விசாரணையில் உள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். வருகை பதிவேடு, பிற ஆவணங்களை பார்வையிட்டு, வருவாய் பதிவேடுகள் பராமரிக்கும் அறையை ஆய்வு செய்தார். பல்வேறு மனுக்கள், சான்றுகளுக்காக வந்திருந்த பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்து, அவர்களது மனுக்களின் நிலைகளை கேட்டறிந்தார். பின், வட்ட வழங்கல் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம், யூனியன் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று, அங்குள்ள பதிவேடுகள், அலுவலக வாயிலில் உள்ள மக்களிடம் குறைகள் கேட்டு, அவர்கள் வந்ததற்கான காரணங்களை கேட்டு, பதில் கூறினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today