ஈரோடு சூலை 29:

ஈரோடு மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருந்தாளுனர், ஆய்வக நுட்புனர் நிலை 2, கதிர் வீச்சாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஒவ்வொரு பணிக்கும் 9 பேர் வீதம் தற்காலிகமாக நிரப்ப உள்ளனர். மாதம் 12 ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்தப்படுவார்கள். ஒன்பது மருந்தாளுனர் பணிக்கு டிப்ளமோ இன் பார்மசி படித்து, தமிழ்நாடு பார்மசி கவுன்சலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆய்வக நுட்புனர் பணிக்கு டிப்ளமோ அல்லது சான்றிதழ் வகுப்பாக இரண்டு ஆண்டு மெடிக்கல் லேபோரட்டரி டெக்னாலஜியும், கதிர்வீச்சாளர் பணிக்கு டிப்ளமோ கோர்ஸ் இன் ரேடியோ டயாக்னசிஸ் டெக்னாலஜி படித்திருக்க வேண்டும். தகுதியானவர்கள் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today