பூதப்பாடி சூலை 14:

பூதப்பாடியில் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 10 ஆயிரத்து 196 தேங்காயை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அங்கு ஏல முறை விற்பனையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.7.70 முதல் ரூ.13.46க்கு விற்பனை செய்தனர். மொத்தம் 50.98 குவிண்டால் தேங்காய் ரூ.93 ஆயிரத்து 271க்கு விற்பனை செய்தனர். தேங்காய் பருப்பு 31.46 குவிண்டால் எடையுள்ள 114 மூட்டையை கொண்டு வந்த விவசாயிகள், ஒரு கிலோ தேங்காய் பருப்பை ரூ.89.19 முதல் ரூ.100.19க்கு விற்பனை செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.86 லட்சமாகும். விவசாயிகள் கொண்டு வந்த ஒரு கிலோ நெல் ரூ.6.49 முதல் ரூ.14.30 என்ற விலையில் 55.45 குவிண்டால் எடையுள்ள 62 மூட்டை நெல்லை ரூ.90 ஆயிரத்து 253க்கு விற்பனை செய்தனர். ஒரு கிலோ எள் ரூ.90.30 முதல் ரூ.94.30 என்ற விலையில் 41.62 குவிண்டால் எடை உள்ள 61 மூட்டை எள் ரூ.3.67 லட்சத்துக்கு விற்றனர். மேலும் ஒரு கிலோ ரூ.58.26 முதல் ரூ.64.90க்கு விற்பனையான நிலக்கடலை, மொத்தம் ரூ.3.35 லட்சத்துக்கு விற்பனையானது. நேற்று ஏலம் மூலம் விற்பனையான அனைத்து விளை பொருட்களுமாக மொத்தம் 236.05 குவிண்டால் எடையுள்ள 392 மூட்டை விளை பொருட்கள் ரூ.11.72 லட்சத்துக்கு விலை போனது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today