மொடக்குறிச்சி டிச 11:

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. மொடக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 103 மூட்டைகளில் 4 ஆயிரத்து 395 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் முதல் தரம் குறைந்த பட்ச விலையாக 97 ரூபாய் 66 காசுக்கும், அதிகபட்ச விலையாக 107 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 97 ரூபாய் 99 காசுக்கும், இரண்டாம் தரம் குறைந்த பட்ச விலையாக 70 ரூபாய் 99 காசுக்கும், அதிக பட்ச 94 ரூபாய் 19 காசுக்கும், சராசரி விலையாக 86 ரூபாய் 19 காசுக்கு ஏலம் போனது.

மொத்தமாக 4 இலட்சத்து 9 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. சிவகிரி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 78 மூட்டைகளில் 5,826 கிலோ எடையுள்ள எள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். 

சிவப்பு ரக எள் குறைந்த பட்ச விலையாக 72 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்ச விலையாக 104 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 82 ரூபாய் 73 காசுக்கும், வெள்ளை ரக எள் குறைந்தபட்ச விலையாக 75 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்ச விலையாக 106 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 100 ரூபாய் 99 காசுக்கும் மொத்தமாக 5 லட்சத்து 45 ஆயிரத்து 899 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர்  தெரிவித்தார். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today