ஈரோடு நவ 16:

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. மண்டல இணை பதிவாளர் கே.ரேணுகா தலைமை வகித்து, கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்து, கூட்டுறவுக்கான உறுதிமொழியை படித்தார். அத்துறையில் பணி செய்யும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

‘கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதிலும் சுகாதாரம் சார்ந்த கூட்டுறவுகளை வலுப்படுத்துவதிலும் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு’ என்ற நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட கூடுதல் பதிவாளர் செந்தமிழ்செல்வி முன்னிலை வகித்தார். துணை பதிவாளர் நர்மதா, ராமநாதன், உதவி இயக்குனர் ரவிகுமார் ஆகியோர் பேசினர். https://www.tncu.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/