ஈரோடு மே 28:-ஈரோடு சி.என்.கல்லுாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம் குறித்து, சென்னை கல்லூரி கல்வி இயக்கக இயக்குனர் பூரணசந்திரன் உத்தரவுப்படி, கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரும், சி.என்.கல்லூரி பாதுகாவலருமான கலைசெல்வி செய்திக்குறிப்பில் கூறியதாவது.
அரசு உதவி பெறும், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டது. இதன்படி, விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு செய்யப்பட்டது. ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு பெற்ற 670 விண்ணப்பதாரர்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பித்து, 600 விண்ணப்பதாரர்கள் உள்ளனர்.
இக்கல்லுாரியின் பாதுகாவலரான, கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் மேற்பார்வையில் நடப்பதாக இருந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. இக்கல்லூரிக்கான காலிப்பணியிடங்கள், அரசு கல்லூரியில் நிரப்புவதுபோல, வெளிப்படை தன்மையுடன், சரியான முறையில் நிரப்பிட, டி.ஆர்.பி., – டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்படும்.ஏற்கனவே பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், தகுதி அடிப்படையில் பரிசீலனைக்கு ஏற்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நிருபர்
ஈரோடு டுடே.