ஈரோடு டிச 11:

இந்தியாவில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்தன. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

தங்கத்தை போன்று பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். பல்வேறு தரப்பினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி வாகனம் நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று மதியம் 12 மணி முதல் 12.10 மணி வரை 10 நிமிடம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஈரோடு மாநகர் பகுதியில் சம்பத் நகர் கவிதைகள் 12 மணிக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சாலைப் போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கனகராஜ் தலைமையில் நிர்வாகிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

இதுபோல் சூரம்பட்டி நால்ரோட்டில் முருகையன் தலைமையில் நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்கினார். இதேபோல் ஈரோட்டில் கருங்கல்பாளையம் மூலப்பாளையம் என ஆறு இடங்களில் போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் சி.ஐ.டி.யு. சார்பில் 30 இடங்களில் வாகன நிறுத்தும் போராட்டம் நடந்தது. https://www.tnsta.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today