ஈரோடு நவ 3:

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசின் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் பட்டா மாறுதல் முகாம்கள் ஒவ்வொரு கிராமமாக நடத்தப்பட்டு வருகின்றது. முகாம் நடைபெறும் பகுதிகள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த வட்டாட்சியர்கள் மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் தவணையானது 73 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை 30 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளலாம். மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஒவ்வொரு கிராமமாக சென்று தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்டு வருகின்றது. சோலார் பகுதியில் புதியதாக பஸ் ஸ்டாண்டு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு பரவும் கோமாரி நோயினை தடுப்பதற்காக தடுப்பூசிகள் போடுவது வழக்கம். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. மாநில அரசிடம் இருந்து மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் தேவையான தடுப்பூசிகள் உள்ளிட்ட விபரங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளது. எனவே விரைவில் ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு கூறினார். https://www.tn.gov.in 

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/