ஈரோடு அக்.16:

முதல்வர் தனிப்பிரிவில் இருந்து மனுதாரர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்துவதால் அலட்சிய போக்கில் செயல்படும் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகளை தாமதமின்றி தீர்வு காணவேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பபடும் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் தீர்வு கண்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து நேரடியாக மனுதாரர்களை செல்போனில் தொடர்பு கொள்ளும் அதிகாரிகள், புகார் நிலவரங்கள், கோரிக்கை மனுக்கள் எத்தனை முறை மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

அதிகாரிகள் கனிவுடன் பதில் அளிக்கின்றார்களா, அதிகாரிகளின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றதா, குறைகள் வேறு ஏதாவது உள்ளதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை கேட்பதோடு அதை பதிவு செய்தும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதே வேளையில் பொதுமக்களின் கோரிக்கைகள், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்கினை கடைபிடித்து வரும் அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. https://www.cmhelpline.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/