ஈரோடு அக்.16:

ஸ்பெயின் நாட்டின் லா நூசியா சர்வதேச ஓபன் 2021 செஸ் சாம்பியன் ஷிப் போட்டி தொடரில், ஈரோட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப. இனியன் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஸ்பெயின் நாட்டின் லா நூசியா சர்வதேச ஓபன் 2021 செஸ் சாம்பியன் ஷிப் போட்டி தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்தது. 14 நாட்டை சேர்ந்த 88 சர்வதேச சதுரங்க வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஈரோட்டை சேர்ந்த ப.இனியன் பங்கேற்றார். மொத்தம் 9 சுற்றுகளாக நடந்த கிளாசிக்கல் பிரிவில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமன் செய்து, 7 புள்ளிகளுடன் இனியன் முதலிடம் பிடித்தார். சிலி கிராண்ட் மாஸ்டர் ரோட்ரிகோ வாஸ்சியூஸ் இரண்டாம் இடத்தையும், உக்ரைன் கிராண்ட் மாஸ்டர் ஆண்ட்றே சுமித் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.. https://www.chessbase.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/