ஈரோடு டிச 11:
ஈரோடு மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் மின்சாரத்துக்கு மாறுவோம் என்பது குறித்த விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு, பிரசார வாகனத்தை மேற்பார்வை பொறியாளர் கு.இந்திராணி துவக்கி வைத்தார். பின் அவர் பேசியதாவது:
மின்சார வாகன பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தி, மின்சார வாகன பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மின்சாரத்துக்கு மாறுவோம் பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. மத்திய மின் துறை அமைச்சகம் தேசிய அளவில், இப்பிரச்சாரத்தை செய்து வருகிறது.
மின்சார வாகனத்தை பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் சேமிப்புடன், காற்று மாசுபாடு குறையும். இதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனம் மூன்று நாட்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கும், என்றார். செயற்பொறியாளர்கள் சூ.மரியா ஆரோக்கியம், சி.ராமசந்திரன், சா.முத்துவேல் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் பங்கேற்றனர். https://www.tnebltd.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today