ஈரோடு டிச 9:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஆண்களுக்கான நவீன குடும்ப நல இலவச கருத்தடை சிறப்பு சிகிச்சைக்கான விழிப்புணர்வு வாகன பயணத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்ட குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை வார விழா நடக்கிறது.
இதற்காக அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கடந்த 4ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை நவீன சிகிச்சை நடக்கிறது. இதில் பங்கேற்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பயனாளிக்கு ஊக்கத்தொகை ரூ.1,100 வழங்கப்படும்.
இதற்காக 9ம் தேதி உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் வரும் 13ம் தேதியன்று சென்னிமலை ஆரம்ப சுகாதார நிலையத்திலும், வரும் 14ம் தேதியன்று அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 15ம் தேதி டி.என்.பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 16ம் தேதி மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 18ம் தேதியன்று மைலம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 20ம் தேதி ஈரோடு காந்திஜி சாலை
நகர்நல மருத்துவ மையம், 21ம் தேதியன்று புஞ்சை புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 24ம் தேதியன்று நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 28 ம் தேதியன்று குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 29ம் தேதியன்று சிவகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 30ம் தேதியன்று தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம் என சிறப்பு முகாம் நடக்கிறது.
இவ்வாறு கூறினார். பொதுமக்களுக்கு குடும்ப நல கையேடு வழங்கப்பட்டது. துணை இயக்குனர்கள் சோமசுந்தரம், ராஜசேகரன், மாநகராட்சி நல அலுவலர் பிரகாஷ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள் ஆறுமுகம், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். https://www.tnhealth.tn.gov.in