ஈரோடு டிச 20:

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தில் விரைவாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த ஈரோடு மின் பகிர்மான வட்டம் நகரியம், தெற்கு, பெருந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின்வாரிய விதிமுறைப்படி பெயர், சர்வே எண், உட்பிரிவு மாற்றம், சர்வே எண் மற்றும் கிணறு மாற்றம் செய்து கொடுக்க சிறப்பு முகாம் நடக்கிறது.

இதன்படி நகரியம் கோட்டம், உதவி மின் பொறியாளர், கவுந்தப்பாடி பிரிவு அலுவலகம், கிருஷ்ணபுரம், கவுந்தப்பாடியிலும், தெற்கு கோட்டம் செயற்பொறியாளர் – தெற்கு கோட்ட அலுவலகம், ஈ.வி.என்., சாலை ஈரோட்டிலும், பெருந்துறை கோட்டத்துக்கு வெங்கமேடு பெருந்துறை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும் வருகின்ற 23ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடக்கிறது.

விவசாய மின் இணைப்புக்கு கடிதம் பெற்ற விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் நேரில் பங்கேற்று பயன் பெறலாம். பெயர் மாற்றத்துக்கு இறப்பு சான்று, வாரிசு சான்று, பங்குதாரர்களின் ஆட்சேபனை இன்மை கடிதம், வி.ஏ.ஓ, சான்றும், சர்வே எண் உட்பிரிவு மற்றத்துக்கு வி.ஏ.ஓ, சான்றுடன் வரைபடமும், சர்வே எண் மற்றும் கிணறு மாற்றத்துக்கு பழைய மற்றும் புதிய கிணற்றுக்கான வி.ஏ.ஓ, சான்றுடன் வரைபடமும் வழங்க வேண்டும். இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கு.இந்திராணி தெரிவித்துள்ளார். https://www.tnebltd.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today