ஈரோடு ஆக 19:

தமிழகத்தில் மின்னகம் என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின் தடை, மின்சாரம் தொடர்பான அனைத்து புகாரையும் அளிக்கலாம்.

மின் விபத்தை தடுக்கவும், பாதுகாப்பான மின் கட்டமைப்பை மேம்படுத்தவும் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் ஆப் எண் 94458 51912 வசதியை பயன்படுத்தலாம். மின் கம்பம் பிரச்னை, மின் கம்பங்கள் கதவு திறந்த நிலை, மின் பெட்டி, தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள், குறைந்த மின்னழுத்தம் போன்ற தகவல்களை இந்த வாட்ஸ் ஆப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

தவிர 24 மணி நேரம் இயங்கும் மின் தடை பழுது நீக்கும் கணினி மையத்தை, 0424 2260066, 0424 2240896, 0424 1912, 1800 425 11912 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கு.இந்திராணி தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today