ஈரோடு சூலை 25:

ஈரோடு மாவட்டத்தில் இளநிலை கல்வி முடித்து முதுநிலை படிக்கும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் டி.இ.டி, டி.என்.பி.எஸ்.சி, போன்ற போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறுபவர், பிரெய்லி எழுத்து வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும், வாசிக்கும் கருவி (எலக்ட்ரானிக் பிரெய்லி ரீடர்) திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், புகைப்படம், முதுநிலை படிக்கும் சான்று நகல், ஆதார் அட்டை நகலுடன் விண்ணப்பிக்கலாம். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today