ஈரோடு சூலை 25:

ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடப்பு கல்வி ஆண்டில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.ஆயிரம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ரூ.4 ஆயிரம், இளங்கலை பட்டம் ரூ.6 ஆயிரம், முதுகலை பட்டம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் அல்லது www.scd.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today