ஈரோடு ஆக 16:
தமிழ் வளர்ச்சி துறை மூலம் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டு தோறும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று 58 வயது நிறைவடைந்த, ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருப்பவர்கள், தாலுகா அலுவலகத்தில் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ் பணி ஆற்றியமைக்கான ஆதாரத்துடன், தகுதி சான்று, தமிழறிஞர்கள் என இருவரிடம் பெற்று விண்ணப்பித்துடன் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் நேரில் அல்லது தமிழ் வளர்ச்சி துறை வலையதளம் www.tamilvalarchithurai.com ல் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
இத்திட்டத்தில் தெரிவு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.3,500 உதவித்தொகை, 500 ரூபாய் மருத்துவ படி அவரது வாழ்நாள் முழுமைக்கும் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் வரும் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today