ஈரோடு அக் 1:

ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தகுதித்தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் வருகிற ஜூலை மாதம் தொடங்கும் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதித்தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 18-ம் தேதியில் நடைபெற உள்ளது. 7 வகுப்பு தேறிய அல்லது 8-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் 2.-7.-2009-க்கும், 1.-1.-2011 -க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த மாணவர்கள்  மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விபரக்கையேடு மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். முகவரி ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளில் எழுதியிருத்தல் வேண்டும். கட்டணம் பொதுப்பிரிவினர்கள் விரைவு தபாலில் பெற ரூ.600-ம், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் ரூ.555-ம், சாதிச்சான்றுடன்  THE COMMANDANT RIMC, DEHRADUN என்ற பெயரில் DRAWEE BRANCH, STATE BANK OF INDIA, TEL BHAVAN BRANCH, DEHRADUN (BANK CODE-01576), UTTARAKHAND-இல் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக பெற்று THE COMMANDANT, RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, GARHI CANTT, DEHRADUN, UTTARAKHAND -248003 என்ற முகவரிக்கு விண்ணப்பத்துடன் அனுப்புதல் வேண்டும். ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியின் விண்ணப்ப படிவங்கள் மட்டுமே ஒப்புக் கொள்ளப்படும்.

தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி ஹாலோகிராம் முத்திரையிடப்படாத விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படும். டேராடூனில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச்சாலை, பூங்காநகர், சென்னை- 600 003 என்ற முகவரிக்கு வருகிற 30–ந்தேதி மாலைக்குள் சென்று சேரத்தக்கவகையில் அனுப்பி வைத்தல் வேண்டும். எழுத்து தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 18-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே விடையளிக்க வேண்டும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். நேர்முகத்தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்தில் பதிவு இறக்கம் செய்தும், ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தை  0424-2263227 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/