ஈரோடு ஆக 24:
ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் செல்போன் பழுது நீக்குதல் குறித்த இலவச பயிற்சி ஆண், பெண் என இருபாலருக்கும் நடக்க உள்ளது. வரும் 31ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை 30 நாட்கள் இலவசமாக பயிற்சி வழங்குவதுடன், சீருடை, உணவும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிராம பகுதியை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், 2ம் தளம், கொல்லம்பாளையம், பைபாஸ் சாலை, ஈரோடு, 638 002. என்ற விலாசத்தில் பயிற்சி நடக்கிறது. பயிற்சியில் சேர விரும்புவோர் 0424–2400338, 8778323213, 7200650604 என்ற எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today