ஈரோடு அக் 20:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், சட்ட உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், என அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
இதுபற்றி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வினோத்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் வரும் 2022-ம் ஆண்டிற்கான தொழிற்சாலைகள் சட்ட உரிமம் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கவருகிற 31-ம் தேதி கடைசி நாளாகும். எனவே உரிமத்தை புதுப்பிக்க https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து புதுப்பித்துகொள்ளலாம்.
உரிய கட்டணத்தை இயக்க இணையதளத்தில் ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பபடிவங்களுக்கு தாமதகட்டணம் வசூலிக்கப்படும். நவம்பர் மாதம் 30-ம் தேதி வரை 10 சதவீதமும், டிசம்பர் மாதம் 31ம் தேதி 20 சதவீதமும், அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 30 சதவீதமும் தாமத கட்டணம் உரிம கட்டணத்துடன் கூடுதலாக செலுத்தவேண்டும்.ஒப்பந்த தொழிலாளர் சட்டம் மற்றும் வெளி மாநில தொழிலாளர் சட்ட பதிவு சான்றுகளுக்கும், இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு கைக்கோளன் தோட்டம், கந்தப்ப வீதியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தையும், 0424 2219521 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/