ஈரோடு நவ 9:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் தொழில் கடன் வழங்கும் சிறப்பு விழா ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஈடிசியா ஹாலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் ரூ.15 கோடிக்கு, தொழில் முனைவோர்களிடம் இருந்து கடன் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதில் ஈரோடு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், நபார்டு உதவி மேலாளர் பொது மேலாளர் அசோக்குமார், ஈடிசியா தலைமை அதிகாரி திருமூர்த்தி, எஸ்.ஐ.ஆர்.சி. தலைவர் ஹரிகேசவன், முதன்மை மாவட்ட மேலாளர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தொழில் கடன் வழங்கும் விழா வரும் 11ம் தேதி வரை ஈரோடு பெரியார் நகரில் உள்ள, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஈரோடு கிளையில் தினமும் 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

விழாவில் கலந்து கொள்ளும் புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே இயங்கிவரும் தொழிலகங்கள் தங்கள் தொழில் குறித்து முழுமையாக திட்ட அறிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த முகாமில் கலந்து கொண்டு கடன் வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு பரிசீலனைக கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக ஈரோடு மாவட்ட கிளை மேலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். https://www.tan.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today