ஈரோடு டிச 28:

மாசுபாட்டை உருவாக்கும் ஆலை அமைக்க உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி கட்டிட அனுமதி பெற முயற்சித்து வருவதாக ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், ஆனந்தம்பாளையம் ஊராட்சி, வார்டு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளித்துள்ள மனு விவரம்:

ஆனந்தம்பாளையம் ஊராட்சி, செல்லாத்தாபாளையம் பகுதியில், குரங்கன் ஓடை கரையோரத்தில், அருந்ததியர் காலனி குடியிருப்பு பகுதிக்கு அருகில் குளிர்பான பாட்டில் தயாரிப்பு ஆலைத் துவங்குவதாக கூறி தனி நபர் ஊராட்சி மன்றத்தின் அனுமதி இன்றி 50 சதவீதத்துக்கும் மேலாக கட்டுமானப் பணியை மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து, கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஊர் மக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதன்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஆலை உரிமையாளர், ஊர் மக்களிடம் சோடா கம்பெனி அமைப்பதாக கூறிவிட்டு தேங்காய் குடோன் அமைப்பதாகவும், ஆயில் மில் அமைப்பதாகவுகும் மாறி, மாறி உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்து வருகிறார்.

மேலும், கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்காக உண்மைக்குப் புறம்பான தகவலைத் தெரிவித்து சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஆலை அமைக்க முயற்சித்து வருகிறார். எனவே, அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய பின்னரே சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tnpcb.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today