ஈரோடு சூன் 28: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடந்தது. சில விதிமுறைப்படி இவர் களுக்கு மதிப்பெண் வழங்க அரசு உத்தர விட்டது. இதற்கு இடையே தற்போது பிளஸ் 1 படித்த மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்பு கடந்த பல நாட்களாக நடந்து வருகிறது. வரும் கல்வி ஆண்டில் கொரோனா பிரச்னை இருந்தாலும் . வெவ்வேறு நிலைகளில் தேர்வை நடத்த அரசு இப்போதே திட்டமிட்டு செயல்படுகிறது. எனவே அதற்கு ஏற்ப பிளஸ் 1 முடித்த மாணவ, மாணவியருக்கு பிளஸ் 2 புத்தகம் வழங்கி, குறைந்த பட்ச பாடத்திட்டத்தில் அவ்வப்போது தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ேற்று முதல் அனைத்து பள்ளியிலும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு அனைத்து புத்தகமும் வழங்கப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் புத்தகங்களை அனைவரும் பெற்று செல்ல தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஒன்றைரை ஆண்டாக பள்ளிக்கு வராத மாணவ, மாணவியர் நேற்று பள்ளிக்கு உற்சாகமாக வந்து சென்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே