ஈரோடு டிச 18:

மத்திய அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட் -இந்தியா மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் 36ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் அருகில் வியாழக்கிழமை தொடங்கியது.

 தொடக்க நிகழ்வுக்கு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதுகுறித்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் ஆர்.ரங்கராஜன் கூறியதாவது:

கண்காட்சியில் 1,000க்கும் மேற்பட்ட குழந்தை நூல்கள், அறிவியல்,  மருத்துவம், தொழில்நுட்பம், கணினி, இணையம், இலக்கியம், திறனாய்வு நூல்கள், சமூக அறிவியல், வரலாறு, கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம், வாழ்க்கை, சட்டம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பொதுஅறிவு உள்ளிட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. 

கண்காட்சியில் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி, பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. கண்காட்சி வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறும், என்றார்.  https://www.bookfestival.org.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today