ஈரோடு சூலை 16:

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கொடுமுடி, சிவகிரி, பூந்துறை, கணபதிபாளையம், நடுப்பாளையம், சிவகிரி, குன்னத்துார், பெருந்துறை என பல்வேறு பகுதிகளில் மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி, நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், முத்துகுமார், ராவுத்குமார், முத்துசாமி, சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறுபான்மை பிரிவு சுரேஷ், விஜயபாஸ்கர், பாஷா உட்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், இளைஞர் அணி தலைவர் யுவராஜா, செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today